பரபரப்பு: பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டது!

#SriLanka #Railway #LANKA4 #Train #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
பரபரப்பு: பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டது!

வடக்கு ரயில் பாதையில் சேவைகள் பாதிப்பு – பயணிகளுக்கு அவசர அறிவிப்பு பொல்கஹாவெலையிலிருந்து மஹாவ நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில், பொத்துஹேரா ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக, பொத்துஹேரா ரயில் நிலையம் ஊடாக பயணிக்க வேண்டிய வடக்கு வழித்தட ரயில் சேவைகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால், வடக்கு நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகளின் நிலைமை தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை பயணிகள் அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4