மத்திய கிழக்கு நிலைமை சீராகும் வரை QR எரிபொருள் முறை தொடரும்!

#SriLanka #Fuel #LANKA4 #QRcode #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Middle East
Abi
3 hours ago
மத்திய கிழக்கு நிலைமை சீராகும் வரை QR எரிபொருள் முறை தொடரும்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் நிச்சயமற்ற நிலைமை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் நிச்சயமற்ற நிலைமை காரணமாக உலகளாவிய எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தில் தொடர்ந்து தாக்கம் ஏற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்காகவே QR முறை தொடரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

QR முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எரிபொருள் நுகர்வு ஓரளவு குறைந்துள்ளதாகவும், டீசல் நுகர்வு சுமார் 10% மற்றும் பெட்ரோல் நுகர்வு சுமார் 9% குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், உலகளாவிய எரிபொருள் நிலைமை சீரடையும் வரை QR முறைமை தற்காலிகமாக தொடரும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4