3 வயதில் அரியணை ஏறிய உலகின் இளவயது மன்னர் ஓயோ நிம்பா காலமானார்
உலகின் மிக இளைய ஆளும் மன்னரான, தனது 3 வயதில் அரியணை ஏறிய நான்காம் ஓயோ நைம்பா கபாம்பா இகுரு ருகிடி காலமானார் என உகாண்டாவின் டூரோ இராச்சியம் தெரிவித்துள்ளது.
34 வயதான ஓயோ நைம்பா கபாம்பா இகுரு ருகிடி அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16, 1992 அன்று பிறந்த ஓயோ, தனது தந்தை மூன்றாம் பேட்ரிக் டேவிட் மேத்யூ கபோயோ ஒலிமியின் மறைவைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 1995 அன்று அரியணை ஏறினார்.
கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக இளைய ஆளும் மன்னராக அங்கீகரிக்கப்பட்ட ஓயோ, உகாண்டாவின் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் 3% பேரை ஆண்டு வந்தார்.
உகாண்டாவின் சில பகுதிகளில் இராச்சியங்கள் உள்ளன, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் நாடு ஆளப்படுவதால், அவற்றின் செல்வாக்கு பெரும்பாலும் அடையாளப்பூர்வமாகவே உள்ளது.
அவரது இளம் வயது காரணமாக, அவருக்கு 18 வயது ஆகும் வரை, அவரது தாயார் ராணி பெஸ்ட் கெமிகீசா, டூரோ இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் மற்றும் உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி ஆகியோர் அடங்கிய ஒரு குழு, அந்த இராச்சியத்தின் விவகாரங்களை நிர்வகிக்க அவருக்கு உதவியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே