தோனியின் ஹெலிகொப்டர் ஷாட்டை செய்து காட்டிய பிரசாந்த் வீர்

#world_news #LANKA4 #sports #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தோனியின் ஹெலிகொப்டர் ஷாட்டை செய்து காட்டிய பிரசாந்த் வீர்

UP 20க்கு 20 லீக் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பிரசாந்த் வீர், தோனி பாணியில் ஹெலிகொப்டர் ஷொட் அடித்து ஆறு ஓட்டங்களை பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிரசாந்த் வீர், 10ஆவது ஓவரின் முதல் பந்தை ஹெலிகொப்டர் ஷொட் மூலம் சிக்ஸராக மாற்றினார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவர், 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார்.

கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிரசாந்த் வீர், அணியின் இறுதி பதினொருவர் வரிசையில் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், துடுப்பாட்டத்தில் தனது திறமையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4