பூட்டான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ஹரிணி!
#SriLanka
#PrimeMinister
#LANKA4
#Bhutan
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
பிரதமர் ஹரிணி அமரசூரிய, விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் தொடர்பான உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (31) காலை பூட்டானுக்கு பயணமானார்.
பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளும் பிரதமர், “தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் முக்கிய உரையாற்றவுள்ளார்.
இதன்போது, நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குதல் தொடர்பாக சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே