முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிரடியாக கைது!

#SriLanka #ARREST #Minister #LANKA4 #ravi karunanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
6 hours ago
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிரடியாக கைது!

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்காக இன்று காலை 8.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கைது இடம்பெற்றுள்ளது.

தேசிய லொத்தர் சபையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு மாறாக ஐவர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4