2026ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தில் வரலாறு படைத்த இலங்கை
#SriLanka
#government
#Dollar
#Export
#LANKA4
#money
#L4
Prasu
2 hours ago
2026ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற வரலாற்று மைல்கல்லைக் கடந்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலமான ஏற்றுமதி வருமானம் 10,487.80 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளதோடு, இது கடந்த 2025ம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.5% வளர்ச்சியாகும்.
இதில் பொருட்கள் ஏற்றுமதி 5.05% வளர்ச்சியுடன் 8,188.32 மில்லியன் டாலர்களையும், சேவைத்துறை ஏற்றுமதி 7.02% வளர்ச்சியுடன் 2,299.48 மில்லியன் டாலர்களையும் ஈட்டித் தந்துள்ளன.
ஜூலை மாதத்தில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் அடங்கலாக மொத்தம் 1,637.26 மில்லியன் டாலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே