இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல இந்திய நடிகை குஷ்பு
#SriLanka
#Actress
#TamilCinema
#LANKA4
#L4
Prasu
1 hour ago
‘Vaanavil Bakthi Isai Narthana Sangamam 2026’ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல இந்திய நடிகை குஷ்பு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சைவ மங்கையர் கழகம் (Hindu Women’s Society Ltd.) ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு கலாசார நிதி திரட்டும் நிகழ்வு, இசை, நடனம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வின் அதிகாரப்பூர்வ விருந்தோம்பல் பங்காளராக செயற்படும் நிறுவனம், குஷ்பு சுந்தரை இலங்கையில் அன்புடன் வரவேற்று, இந்த சிறப்பு நிகழ்வில் தங்களும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வு மூலம் கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிப்பதுடன், சமூக நலனுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே