72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

#SriLanka #Health #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

மக்கள் நோயுற்ற பின்னர் சிகிச்சையளிப்பதை விட, நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், புதிதாக நியமிக்கப்பட்ட பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்கள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகுகள் மற்றும் “ஆரோக்கியா” நல்வாழ்வு மையங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

தற்போது நாட்டின் சுகாதார சேவையில் சுமார் 260 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருவதாகவும், அடுத்த கட்டமாக மேலும் 300 பேரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், தாதியர் பணிப்பாளர்கள், தாதியர் உயர் கல்விக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4