2026 தேசிய கனிமக் கொள்கையின் கீழ் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த நடவடிக்கை

#SriLanka #LANKA4 #Devolopment #national #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
2026 தேசிய கனிமக் கொள்கையின் கீழ் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த நடவடிக்கை

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கைக்கு அமைவாக, இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதன்போது, நாட்டின் கனிம வளங்களை ஆராய்ச்சி செய்தல், அகழ்வு செய்தல் மற்றும் அவற்றுக்கு பெறுமதி சேர்த்தல் உள்ளிட்ட செயல்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், உள்நாட்டு கனிம வளங்களை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் முறையாக பயன்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

உள்நாட்டு கனிம உற்பத்தித் தொழிற்துறையை வலுப்படுத்துவதற்காக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்குதல், அத்துடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகிய விடயங்களுக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4