இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
#SriLanka
#LANKA4
#Public
#debt
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
2026 ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.32.977 ட்ரில்லியனாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் ரூ.32.233 ட்ரில்லியனாக இருந்த கடன், இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.744 பில்லியனால் அதிகரித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் கடன் ரூ.31.999 ட்ரில்லியனாக பதிவாகியுள்ளதுடன், இதில் ரூ.19.203 ட்ரில்லியன் உள்நாட்டுக் கடனாகவும், ரூ.12.796 ட்ரில்லியன் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலர் மதிப்பில் வெளிநாட்டுக் கடன் 102.27 பில்லியன் டொலரிலிருந்து 97.95 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.
இருதரப்பு கடன் வழங்குநர்களில் சீனா 5.01 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்திலும், ஜப்பான் 2.27 பில்லியன் டொலர்களுடனும், இந்தியா 853.9 மில்லியன் டொலர்களுடனும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே