நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

#SriLanka #today #Rain #Country #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் 30–40 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படலாம்.

அதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.0–2.5 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் எழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4