சமரி அத்தபத்து: மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனை!

#LANKA4 #sports #Record #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
58 minutes ago
சமரி அத்தபத்து: மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனை!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் T20I தரவரிசையில் தனது சிறந்த தரநிலையை எட்டியுள்ளார்.

அவர் துடுப்பாட்டத்தில் 6ஆவது இடத்திலும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 3ஆவது இடத்திலும், பந்துவீச்சில் 33ஆவது இடத்திலும் உள்ளார்.

மூன்று பிரிவுகளிலும் இது அவருடைய தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் அதிகபட்ச தரவரிசைப் புள்ளிகளாகும்.

சமரி அத்தபத்து தனது முதல் ஆசியக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், 3 ஓவர்களில் 1 விக்கெட்டையும் பெற்றிருந்தார். 

இதன் மூலம் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

மேலும், இலங்கை அணி இன்று மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4