பரீட்சை முறைகேடு: கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ரூ.5 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு!
#SriLanka
#Colombo
#Student
#LANKA4
#Examination
#University
#Case
#Fraud
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
55 minutes ago
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தில் உயர் டிப்ளோமா பயிலும் மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகளால் ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புகளுக்காக ரூ.5 மில்லியன் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட எட்டு பேரை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் கையூட்டு கோரியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் மனுதாரரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே