வசூலில் மோசமான சாதனை படைத்துள்ள யாஷின் டாக்சிக்
யஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக்.
கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், டாக்சிக் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் யஷின் டாக்சிக் திரைப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது.
முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்த நிலையில், அடுத்த 6 நாட்களில் மொத்தமாக ரூ. 150 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள சரிவை தெளிவாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே