அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

#SriLanka #Minister #LANKA4 #UAE #Official #Visit #ADDA #Vijitha Herath #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (செப்டெம்பர் 02) மற்றும் நாளை (செப்டெம்பர் 03) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இப்பயணத்தின் போது, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சர் கலாநிதி அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை அமைச்சர் விஜித ஹேரத் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அகமது அல் ஜயூதியுடன் இணைந்து, துபாயில் நடைபெறும் “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4