தமிழ் சினிமாவில் நடிகை கயாடு லோஹருக்கு பிடித்த நடிகர் யார்?

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Social Media #L4
Prasu
1 hour ago
தமிழ் சினிமாவில் நடிகை கயாடு லோஹருக்கு பிடித்த நடிகர் யார்?

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக பிரபல்யமாகிவரும் நடிகை கயாடு லோஹர், தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். 

அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரிட் ஹீரோ யார்?" என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, புன்னகையுடன் பதிலளித்த கயாடு லோஹர், "தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்! தமிழ் சினிமாவில் அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை," என்று உற்சாகமாகத் குறிப்பிட்டுள்ளார்.

கயாடு லோஹர் இதுவரை தனுஷுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தனுஷின் 'காரா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 

ஆனால், பிற படங்களின் படப்பிடிப்பு தேதிகளுடன் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் தவறவிட நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4