வருமான வரி விதிப்பு : பொதுமக்களின் சுமையை களைய அவசர நடவடிக்கைக்கு வலியுறுத்து

#SriLanka #people #taxes #Presidential Secretary
Thamilini
1 hour ago
வருமான வரி விதிப்பு  : பொதுமக்களின் சுமையை களைய அவசர நடவடிக்கைக்கு வலியுறுத்து

வருமான வரி விதிப்பு (PAYE) காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பெரும் சுமையைக் களைய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமநாயக்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு வருவாய் ஆணையாளர்கள் சங்கத்தின் 21வது ஆண்டுப் பொது மாநாட்டில் கலந்துகொண்டபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,தற்போது நிலவும் நிலைமையைத் தாமதமின்றிச் சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் வலியிறுத்தியுள்ளார். 

இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களமானது, பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையான நிலைக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் என்றும், அவர் இதன்போது குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4