பிற்பகலுக்கு பிறகு நிகழும் மாற்றம் - மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்ப்பு
#SriLanka
#weather
#Rain
#Department of Meteorology
Thamilini
2 hours ago
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல கட்டங்களாக மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே