யாழ். கோயிலில் மாம்பழம் ரூ.11 இலட்சத்திற்கு ஏலம்!

#SriLanka #Jaffna #Temple #LANKA4 #Mango #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
யாழ். கோயிலில் மாம்பழம் ரூ.11 இலட்சத்திற்கு ஏலம்!

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'முருகையா தேவஸ்தானத்தில்' மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் போது இந்த ஏலம் நடத்தப்பட்டது. 

இதில் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவியதை அடுத்து, மாம்பழம் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே திருவிழாவில் மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இம்முறை அந்தத் தொகை மேலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4