இலங்கை தேயிலை விலை வீழ்ச்சி!
2026 ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையின் சராசரி விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,174.46 ஆகக் குறைந்துள்ளதாக Forbes and Walker நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2025 ஒகஸ்ட் மாதத்தில் கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,182.27 ஆகப் பதிவான நிலையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் ரூ.7.81 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மதிப்பில், 2025 ஒகஸ்டில் கிலோகிராம் ஒன்றுக்கு 3.92 அமெரிக்க டொலராக இருந்த தேயிலை சராசரி விலை, 2026 ஒகஸ்டில் 3.53 டொலராக குறைந்துள்ளது.
இதன்படி 0.39 டொலர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, 2026 ஜூலை மாதத்தில் பதிவான ரூ.1,176.10 சராசரி விலையுடன் ஒப்பிடுகையில், ஒகஸ்ட் மாதத்தில் ரூ.1.64 என்ற சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும், டொலர் மதிப்பில் ஜூலை மாதத்தில் காணப்பட்ட 3.50 டொலரிலிருந்து 3.53 டொலராக ஒகஸ்ட் மாதத்தில் சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன் மூலம், இலங்கையின் தேயிலை விலையில் வருடாந்த அடிப்படையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே