மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறப் பதிவு எண் தகடுகள்

#SriLanka #LANKA4 #vehicle #Electric #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறப் பதிவு எண் தகடுகள்

இலங்கையில் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட புதிய பதிவு எண் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த புதிய பதிவு எண் தகடுகளின் சட்டப்பூர்வ செல்லுபடியை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். 

ஏனைய வாகனங்களுக்கு வழமைபோன்று வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பதிவு எண் தகடுகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்கள் மற்றும் 2023, 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்கள் என மொத்தம் 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான புதிய பதிவு எண் தகடுகளை நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4