இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் - மஹிந்த சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang), நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 25 அன்று தனது தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள தூதுவர் வெய்யிற்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இலங்கை பொதுஜன முன்னணியின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.
இதன்போது, சீன நாகரிகத்தின் சிறப்பம்சங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கும் வகையிலான, பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய சிறப்புப் புத்தகம் ஒன்றை தூதுவர் வெய், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.
தூதுவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைப் பயணம் குறித்தும், இலங்கை கலாச்சாரம் மற்றும் மக்கள் மீதான ஈடுபாடு குறித்தும் நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கைக்கு சீனா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே