இன்று இரவு லண்டன் புறப்படும் தமிழக முதல்வர் விஜய்

#India #Tamil Nadu #LANKA4 #Vijay #London #ChiefMinister #L4
Prasu
1 hour ago
இன்று இரவு லண்டன் புறப்படும் தமிழக முதல்வர் விஜய்

தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக வெளிநாடு பயணமாக லண்டனுக்கு செல்கிறார்.

தமிழக பொருளாதாரத்தை 2036ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதை த.வெ.க அரசு தனது இலக்காக அறிவித்துள்ளது. 

இதற்காக சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கார் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த நிலையில், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர். 

அதன் படி, இன்று இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து லண்டனுக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுகிறார்.

துபாய் வழியாக லண்டன் செல்லும் விஜய், செப்டம்பர் 16ம் திகதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4