முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை

#SriLanka #Gotabaya Rajapaksa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #FCID
Thamilini
8 hours ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை

MiG ரக விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான பரிவர்த்தனை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டிருந்தார் 

இந்நிலையில் தற்போது அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

 இதற்கிடையில், அதே பரிவர்த்தனை தொடர்பான வாக்குமூலத்தை அளிப்பதற்காக, முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ரோஷன் குணதிலக்க நேற்று (10) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்திருந்தார். 

 ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4