இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் Amphibious படகு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிலத்திலும் நீரிலும் இயங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப Amphibious (உபயஜல) படகு ஒன்று நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை நேற்று (10) கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
Ocean Voyager International நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படகு, இலங்கையின் கடல்சார் உற்பத்தித் துறையில் புதிய முன்னேற்றத்திற்கான முக்கிய தொடக்கமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை கருத்துகள் மற்றும் திட்டங்களின் மட்டத்தில் வைத்திருக்காமல், நடைமுறை ரீதியாக வெற்றியடையச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால், குறுகிய காலத்தில் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய முன்னணி துறையாக படகு மற்றும் கப்பல் உற்பத்தித் துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், இலங்கையின் திறமையான பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன் நாட்டை பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு தேவையான வசதிகளையும் முழுமையான அரசாங்க ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் SLYG நிறுவனக் குழுமத்தின் தலைவர் Pierre Pringiers உள்ளிட்ட நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் முதலீட்டு சபை (BOI) அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே