பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பான, வசதியான தேர்வாக மாற்றுவதே அரசின் இலக்கு!

#SriLanka #government #LANKA4 #Public #Safe #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Transport
Lakhi
4 hours ago
பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பான, வசதியான தேர்வாக மாற்றுவதே அரசின் இலக்கு!

பொதுப் போக்குவரத்தை பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“கனவு இலக்கு” திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுப் போக்குவரத்து மீதான மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். 

மேலும், மருதானை–மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4