சிறைச்சாலைகளைக் காட்டி எங்களை பயமுறுத்த முடியாது – நாமல் ராஜபக்ச
#SriLanka
#Namal Rajapaksha
#LANKA4
#threats
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
செப்டம்பர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள தமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தமது பேரணியை நடத்துவதற்காக அனுராதபுரத்தில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானம் ஒன்றை கோரியிருந்த போதிலும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார்.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “சிறைச்சாலைகளைக் காட்டி எங்களை பயமுறுத்த முடியாது” எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தமது பிரச்சார நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே