ஹிஸ்புல்லாவின் முக்கிய சுரங்கப் பாதைகள் தகர்ப்பு - இஸ்ரேல் அறிவிப்பு

#SriLanka #Israel #tunnel #Hezbollah #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
ஹிஸ்புல்லாவின் முக்கிய சுரங்கப் பாதைகள் தகர்ப்பு - இஸ்ரேல் அறிவிப்பு

தெற்கு லெபனானில் உள்ள  அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். 

அவர் அறிக்கையில், இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," எனத் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை இதனை உறுதிப்படுத்தும் விதமாக லெபனானின் அரசத் தொலைகாட்சி  அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4