யாழ்ப்பாணத்தில் அரசுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் !
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் இன்று (12) உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், தமிழ் மக்களின் முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான பிரஜா சக்தி முறைமையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவித்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவு தவிர்ப்பு போராட்டம், மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் பிரதான நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே