62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!
நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது.
எல் நினோ காரணியுடன் தொடர்புடைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. இதேவேளை, இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 97,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நோயினால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.
டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே