“கட்டிடங்கள் மட்டுமல்ல – அனைவருக்கும் பாதுகாப்பான நகரங்களை உருவாக்க வேண்டும்!”
“காங்கிரீட் கட்டிடங்களை அமைப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் வாழ்க்கையை அழகாக மாற்ற முடியாது. நகரமானது அதில் வாழும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பும் உரிமையும் கொண்ட இடமாக அமைய வேண்டும்.
” செப்டெம்பர் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட “நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை” என்ற வரவுசெலவுத் திட்ட யோசனைக்கு இணையாக செயல்படுத்தப்படும் “Life Cities” (வாழ்வியல் நகரங்கள்) அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி என்பது வெறுமனே காங்கிரீட் கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டதுடன், நகரங்களில் வாழும் மக்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் உரிமைகளை மதிக்கும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான, அழகான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குவதே “Life Cities” திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே