பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங்

#India #China #Delhi #LANKA4 #President #Brics #Summit #L4
Prasu
1 hour ago
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங்

18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜின்பிங் தற்போது டெல்லி வந்துள்ளார்.

ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு விமான நிலையத்தில் இந்திய பாரம்பரிய கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதி ஜின்பிங் ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். 

அதற்கு முன்பு 2016ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் இந்திய பயணத்தின்போதும் ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4