யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது - படகுகள் பறிமுதல்

#SriLanka #Jaffna #ARREST #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #fishing boats
Thamilini
5 hours ago
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது - படகுகள் பறிமுதல்

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய மற்றும் பல்லியா வாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து மூன்று டிங்கி படகுகளும், 1,900 க்கும் அதிகமான கிலோகிராம் மீன் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் மீன் தொகையை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4