வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்குகள் விசேட வழிப்பாடு - சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறு
#SriLanka
#Vavuniya
#Police
#Vedukunarimalai Adilingeswarar Temple
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
வவுனியா வெடுக்குநாறிமலையில் நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் விசேட பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலயத்திற்குச் சென்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே