‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
#India
#Cinema
#LANKA4
#release
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
இதனுடன், திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் திகதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ஆம் திகதி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால், திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே