ஏர்பஸ் கொள்வனவு மோசடி - நாமலை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை

#SriLanka #Namal Rajapaksha #SLPP #Scam #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 week ago
ஏர்பஸ் கொள்வனவு மோசடி - நாமலை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான பணமோசடி விசாரணை ஆகியவற்றில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக  பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய விமான நிறுவனத்தின் ஏர்பஸ் கொள்முதல் செயல்முறையுடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான நமல் ராஜபக்ஷவை சந்தேகநபரான பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெள்ளிக்கிழமையன்று இவ்விவகாரத்தை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் கொள்முதல் விவகாரம் தொடர்பான லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை அக்டோபர் 13, 2026-க்குள் சமர்ப்பிக்குமாறு லஞ்ச அல்லது ஊழல் பற்றிய விசாரணைக்கான ஆணைக்குழுவிற்கு (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!