தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு - இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து
#SriLanka
#Job Vacancy
#Thailand
#Deal
#ADDA
#Vijitha Herath
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
தாய்லாந்தில் தற்போதுள்ள தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பத்தாயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பொருத்தமான வேலைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புகளுக்கு இலங்கையர்களை வழிநடத்தும் வகையில், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நேற்று (14) இரண்டு சிறப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
வெளியுறவு அமைச்சர் விஜயத ஹெரத் தாய்லாந்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.