வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல் பொய் – நளிந்த
#SriLanka
#Minister
#LANKA4
#Foriegn
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Nalinda Jayatissa
Abi
4 hours ago
தாம் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக தாம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே, அது உண்மையா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சு பதவி தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே