கர்நாடகாவில் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்
கர்நாடகாவில் ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டி (refrigerator) வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தால் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 65 வயது கஜானன் தமோனே, 21 வயது ரோஷன் தமோனே, 45 வயது சாரதா தமோனே மற்றும் 50 வயது பாரதி தமோனே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 28 வயது பிரியா தமோனே மற்றும் 25 வயது கங்கா தமோனே ஆகியோர் பலத்த காயமடைந்தனர்; அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டிற்குள் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களால் தப்பிக்க இயலாத சூழல் ஏற்பட்டதால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே