திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நல குறைவு

#India #TamilCinema #Hospital #LANKA4 #M.K.Stalin #L4
Prasu
2 hours ago
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நல குறைவு

செப்டம்பர் 17 தி.மு.க தொடங்கிய நாள், செப்டம்பர் 15 தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும்.

இந்நிலையில், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மேலும், முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4