நெதன்யாகுவின் அலங்கார செலவு சர்ச்சை – பல கோடி அரச நிதி வீண்!

#world_news #Expense #LANKA4 #Public #Netanyahu #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நெதன்யாகுவின் அலங்கார செலவு சர்ச்சை – பல கோடி அரச நிதி வீண்!

2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக சுமார் 4.70 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அரச நிதியில் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் சுமார் 90 சதவீத செலவுகள் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோருடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒப்பனைச் செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும், 2025 பெப்ரவரியில் அவர் மேற்கொண்ட வாஷிங்டன் பயணத்தின் போது மட்டும் ஒப்பனைக்காக சுமார் 13,500 டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணம் தனிப்பட்ட நிதி அல்ல என தகவல் அறியும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஒப்பனைக் கலைஞர்களின் பெயர்களை அரசு வெளியிடவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!