கலிபோர்னியாவில் 700 அடி உயரப் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மலையேற்ற வீரர் மீட்பு

#Hospital #America #LANKA4 #Player #Rescue #Mountain #L4
Prasu
2 hours ago
கலிபோர்னியாவில் 700 அடி உயரப் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மலையேற்ற வீரர் மீட்பு

கலிபோர்னியாவில் உள்ள சியரா தேசியக் காட்டில், 700 அடி உயரமுள்ள செங்குத்துப் பாறையில் சிக்கிக்கொண்ட காயமடைந்த மலையேற்ற வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாகப் பாதுகாப்பான இடத்திற்கு ஏற முடியாமல் ஒரு நபர் அங்கு சிக்கிக்கொண்டதாகக் கலிபோர்னியா மாநிலக் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அந்த மலையேற்ற வீரர் ஹெலிகாப்டர் உதவி மூலம் மீட்கப்பட்டுள்ளார். 

ஃப்ரெஸ்னோ கவுண்டியில் உள்ள கோர்ட்ரைட் நீர்த்தேக்கத்திற்கு (Courtright Reservoir) அருகே அவர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், சிகிச்சைக்காக அந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!