INDvsAFG - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

#India #Afghanistan #LANKA4 #T20 #Cricket #L4
Prasu
2 hours ago
INDvsAFG - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் சார்பில், சட்ரான் 37 ஓட்டங்களும் ரசூலி 27 ஓட்டங்களும் ரஷித் கான் 28 ஓட்டங்களும் குவித்தனர்

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 14.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில், சஞ்சு 57 ஓட்டங்களும் அபிஷேக் 37 ஓட்டங்களும் இஷான் 38 ஓட்டங்களும் குவித்தனர். 

இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!