இலத்திரனியல் சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 06 மாதக் கால உத்தரவாதம் அவசியம் - நுகர்வோர் விவகார அதிகாரசபை
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#ELECTRONIC APPLIANCES
#CONSUMER AFFAIRS AUTHORITY
Thamilini
2 hours ago
மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை விற்பனை செய்யும் போது, நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத கால உத்தரவாதமும் (Warranty), அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாத சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது வாய்மொழியாக "உத்தரவாதம் உள்ளது" என்று கூறுவது மட்டும் போதாது என்றும், அதை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், நுகர்வோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், விதிமுறைகளை மீறிய மின் மற்றும் இலத்திரனியல் சாதன விற்பனையாளர்களுக்கு எதிராக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.