நாமல் ராஜபக்சவுக்கு பணம் வழங்கியதை உறுதிப்படுத்திய வர்த்தகர் நிமல் பெரேரா
#SriLanka
#Investigation
#Namal Rajapaksha
#LANKA4
#Bribery
#L4
Prasu
2 hours ago
ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 லட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.