INDvsAFG - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை வைட் வாஷ் செய்த இந்திய அணி
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில், அதிரடியாக விளையாடிய அபிஷேக் 108 ஓட்டங்களும் சஞ்சு 50 ஓட்டங்களும் ஷ்ரேயாஸ் 29 ஓட்டங்களும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில், சட்ரான் 25 ஓட்டங்களும் ஓமர்சாய் 19 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், இந்திய அணி 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.