அமெரிக்கா–ஈரான் மோதல்: ட்ரம்ப் முக்கிய முடிவு; எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

#world_news #Attack #LANKA4 #Oil #Iran #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
9 hours ago
அமெரிக்கா–ஈரான் மோதல்: ட்ரம்ப் முக்கிய முடிவு; எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

ஈரானுடன் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மீண்டும் தீவிரமான தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிக்கும் முக்கிய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக முழுமையான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து விரைவில் முக்கிய முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் டோகோ நாட்டுக் கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

தாக்குதலையடுத்து கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதுடன், அதன் பயணம் தடைப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!