சட்டவிரோத கடவுச்சீட்டு தயாரிப்பில் குடிவரவு அதிகாரி கைது

#SriLanka #ARREST #Passport #LANKA4 #immigration #officer #illegal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
சட்டவிரோத கடவுச்சீட்டு தயாரிப்பில் குடிவரவு அதிகாரி கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

42 வயதுடைய குறித்த அதிகாரியை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!