சவுதியில் அனோஜனுக்கு மரண தண்டனை !
#SriLanka
#LANKA4
#Social Media
#SaudiArabia
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
4 hours ago
சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் முன்னதாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 3 மில்லியன் சவுதி ரியால்கள் அபராதம் விதித்திருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தலையீடு குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.